Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் ஆதரவு பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் ஆதரவு பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை

புத்ராஜெயா, ஜன.4-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு அதரவு தெரிவிக்கும் பேரணி நடத்தப்படுவதற்கு அனுமதியில்லை என்று போலீஸ் துறை அறிவித்துள்ளது. புத்ராஜெயா நீதித்துறை கட்டடத்திற்கு வெளியே நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த பேரணி குறித்து அதன் எற்பாட்டாளர்களிடம் இவ்விவகாரம் தெரிவிக்கப்பட்டு விட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அ யிடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

ஆதரவு பேரணி நடத்துவதற்கு அனுமதி கேட்டு அதன் ஏற்பாட்டாளர்கள் கடந்த டிசம்பர் 31 விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தனர். ஆனால், அந்த விண்ணப்பம் போலீஸ்துறையின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில் இல்லை என்று அவர் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →