Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் தலையிட மாட்டேன் – அன்வார்
அரசியல்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் தலையிட மாட்டேன் – அன்வார்

Share:

நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசாரின் பதவி தொடர்பான விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அரசக் குடும்பம் தொடர்பான எந்தவொரு சர்ச்சையும் கூட்டரசு அரசமைப்புச் சட்டம், மாநில அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மலேசியா அரசமைப்பு முடியாட்சியைப் பின்பற்றுவதால், ஓர் ஆட்சியாளரை பதவியிலிருந்து அகற்றுவது போன்ற நடவடிக்கைகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

நெகிரி செம்பிலானின் நான்கு உண்டாங் தலைவர்கள் எடுத்துள்ள முடிவு செல்லத்தக்கதா, செல்லத்தக்கதல்லதா என்பதை உரிய நடைமுறையில் தீர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சியாளரை எளிதில் பதவியிலிருந்து அகற்றும் நடவடிக்கையை தாம் ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரம் நல்ல முறையில் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்குக்கூட அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள அதிகார வரம்புகள் உள்ளன என்றும், மலாய் ஆட்சியாளர்கள் தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகளை தன்னிச்சையாக மாற்ற முடியாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லத்தக்கதே – சட்டத்துறை தலைவர் திட்டவட்டம்

நெகிரி செம்பிலான் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லத்தக்கதே – சட்டத்துறை தலைவர் திட்டவட்டம்

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி