சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான், கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வேளையில் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 96 லட்சத்து 70ஆயிரம் பேர் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்காக 3,190 வாக்குச்சாவடிகள் காலையில் திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படவிருக்கின்றன.
மதியம் 12 மணி வரையில் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. மதியம் 12 மணி வரையில் 6 மாநிலங்களுக்கான வாக்களிப்பு எவ்வித அசாம்பாவிதமின்றி சுமூகமாக நடைபெற்று வருவதாக போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். அனைத்து வாக்கு மையங்களிலும் நடப்பு நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
6 மாநிலங்களின் தேர்தலில் 245 தொகுதிகளில் 572 வேட்பாளரகள் போட்டியிடுகின்றனர்.
ஒன்பது அரசியல் கட்சிகள் மற்றும் 41 சுயேட்சைகள் இத்தேர்தலில் போட்டியிட்டாலும் இது பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணிக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நிலவும் பலப்பரீட்சையாகவே கருதப்படுகிறது. முதல் தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறத.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்


