Dec 20, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாட்டார்
அரசியல்

நஜீப் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாட்டார்

Share:

கோலாலம்பூர், ஜன. 4-


அரச மன்னிப்பு கேட்டு, டத்தோஸ்ரீ நஜீப் ரசாக், புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மாட்டார் என்று அவரின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அறிவித்துள்ளார்.

மாறாக, வரும் ஜனவரி 6ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெறும் அவரின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் கவனம் செலுத்துவார் என்று ஷாபி அப்துல்லா குறிப்பிட்டார்.

தனது எஞ்சிய சிறைத் தண்டனை காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பற்கு அரசாணை உத்தரவு உள்ளதா? இல்லையா என்பதை அறியும் பொருட்டு, நஜீப் இந்த மேல்முறையீட்டை செய்துள்ளார் என்று ஷாபி மேலும் விளக்கினார்.

Related News