கோலாலம்பூர், பிப்ரவரி.20-
பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவரும், அக்கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் மற்றும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய கட்சியில் இணையவுள்ளனர்.
இப்புதிய கட்சியில் ஹம்ஸாவுக்கு ஆதரவு தெரிவித்த தொகுதித் தலைவர்களும் இடம் பெறவுள்ளதாக பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அஸாஹாரி ஹசான் தெரிவித்துள்ளார்.
இப்புதிய கட்சியானது அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும், அதில் தான் இணையப் போவதாகவும் அஸாஹாரி ஹஸான் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம், பெர்சத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவானது ஹம்ஸா உட்பட 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்தது.
இதனையடுத்து, ஹம்ஸாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஜோகூர் மாநிலம் உட்பட பல்வேறு மாநிலங்களிலுள்ள பெர்சத்து தொகுதிகள் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.








