Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

ஆடம்பர வாகனங்களின் மொத்த எண்ணிக்கை அறிவிக்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜன.23-

வரும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு இலவச டோல் கட்டண சலுகை அமல்படுத்தப்படுமானால், ஆடம்பர வாகனங்களுக்கு மட்டும் டோல் கட்டணம் விதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பண்டிகை காலத்தின் போது அமல்படுத்தப்பட்ட டோல் கட்டண இலவச சலுகையை அனுபவிக்கத் தகுதியில்லாத ஆடம்பர வாகனங்களின் மொத்த எண்ணிக்கையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் ஹோ சாய் சவால் விடுத்துள்ளார்.

ஆடம்பர வாகன உரிமையாளர்கள் பண்டிகைக் ஆஆளா இலவச டோல் சாவடி சலுகையை அனுபவிக்கக்கூடாது என்பது உண்மையாக இருக்குமானால், அந்த ஆடம்பர வாகனங்களுக்கு அதிக கட்டணங்களை விதிப்பதன் மூலம் புதிய டோல் கட்டண விகித சரிசெய்யும் முறையை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என்று டோமினிக் லாவ் வலியுறுத்தியுள்ளார்.

"பிரச்சினைகளை பல்வேறு வழிகளில் தீர்க்க முடியும். பணக்காரர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பயன்படுத்த வேண்டாம். T15 தரப்பினரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்துபவர்கள் ஆவர் என்று டோமினிக் நினைவுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்பு டோல் சாவடிகளை அகற்றப் போவதாக உறுதியளித்து இருந்தார். ஆனால், இப்போது வாகன வகைகள் குறித்த புதிய கதையை கொண்டு வர முயற்சிப்பது, முரண்பாடாக உள்ளது என்று டோமினிக் குறிப்பிட்டார்.

Related News