பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 27-
கிளந்தான், குவா மூசாங் செஷன்ஸ நீதிமன்றத்தில் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் இன்று குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான்ஸ்ரீ முகைதீன் யாசின், நீதிமன்றத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தல் முடிவுக்கு பின்னர் நாட்டின் பிரதமராகுவதற்கு 115 எம்.பி.க்களின் ஆதரவை தாம் பெற்றிருந்த போதிலும் இஸ்தானாவிற்கு மாமன்னர் தம்மை அழைக்கவில்லை என்று நெங்கிரிசட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முகைதீன் பேசியதாக கூறப்படுவது தொடர்பில் அவர் மீது தேச நிந்தனை சட்டம் பாய்ந்துள்ளது.
குற்றச்சாட்டை மறுத்து தாம் விசாரணை கோரிய போதிலும் தமக்கு நீதி கிடைக்கும் என்று குவா மூசாங் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முகைதீன் மேற்கண்டவாறு கூறினார்.








