அடுத்த மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நடப்பு ஒற்றுமை அரசாங்கம் வீழ்ச்சி காணாது என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் இன்று ஆருடம் கூறியுள்ளார்.
அதேவேளையில் மலேசியா மீண்டும் ஒரு முறை உலக அரங்கின் கவனத்தை ஈர்ப்பதற்கான சூழலை வாக்காளர்கள் நேரில் காணும் நிலை இருப்பதாக முன்னாள் இஸ்கண்டார் புத்ரி எம்.பி.யுமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.
எம்.பி.க்கள் கட்சித் தாவலுக்கு தடை விதிக்கும் ஒரு வலுவான சட்டத்தை நாடு இயற்றியிருப்பதால் எம்.பி.க்கள் தங்களின் சுயநலனுக்காக கட்சித் விட்டு கட்சித் தாவும் நிலை இனி இருக்காது. அப்படி தாவினால் அதற்கு எத்தகைய விலை கொடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு எம்.பி.யும் உணர்ந்துள்ளனர்.
எனவே சட்டமன்ற்த தேர்தல் முடிவுகள், கூட்டரசு அரசாங்கத்தை பாதிக்காது. நடப்பு அரசாங்கம் தொடரும் என்ற ஜசெகவின் முன்னாள் த லைவருமான லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.