கோலாலம்பூர், நவ.6-
2024 ஆம் ஆண்டுக்கான STR ரொக்கப்பணப் உதவியில் கடைசி தவணைக்கான பணவாடா, நாடு முழுவதும் உள்ள 87 லட்சம் பேருக்கு நாளை வியாழக்கிழமை முதல் அவர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
கடைசி கட்ட STR நிதிக்காக அரசாங்கம் 3.4 பில்லியன் அல்லது 340 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர்தெரிவித்துள்ளார்
அதேவேளையில் ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் SARA எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா ரொக்க நிதி உதவியை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள வறிய நிலையை சாராத 80 லட்சம் பேருக்கு திங்கட்கிழமை முதல் வழக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.








