ஜூலை 28 -
மதுபானம் மற்றும் சூதாட்டத்தின் வழி பெறப்படுகின்ற வருமானத்தை தாய்மொழி பள்ளிகள் முக்கியமாக சீனப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக நன்கொடை அளிப்பதில் தனக்கு எந்த ஒரு எதிர் கருத்து இல்லை என கெரக்கான் கட்சியின் தலைவர் Dominic Lau தெரிவித்திருந்த கருத்துக்கு பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் கொள்கையை கெரக்கான் கட்சி ஏற்குமெனில் அதனுடனான் உறவு தொடரும் எனவும், அதனை மீறி ஜசக கட்சியின் கருத்தோடு கெரக்கான் ஒத்துப்போனால் அடுத்த பொது தேர்தலின் போது கெரக்கான் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி பாஸ் கலந்தாலோசிக்கும் என அவர் தெளிவுப்படுத்தினார்.








