Dec 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

ஹான்னா யோ பூர்வீகத்தை ஆராயும் மற்றொரு பாஸ் தலைவர்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.27-

டிஏபியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் சிகாம்பும் எம்.பி.யும். இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சருமான ஹான்னா யோவின் பூர்வீகத்தை ஆராய்ந்துள்ள பாஸ் கட்சியின் மற்றொரு தலைவர்,அவதூறு வழக்கிற்கு ஆளாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் முன்னணி மேம்பாட்டாளர் நிறுவனமும், உலகில் பல நாடுகளில் கிளை ஸ்தாபனங்களை வேரூன்ற செய்துள்ள நிறுவனமான YTL- நிறுவனத்துடன் ரத்த தொடர்புடையவர்தான் ஹன்னா இயோ என்று பாஸ் கட்சியின் பேரா மாநில தலைவர் ராஸ்மான் சகாரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அந்த பாஸ் தலைவரின் வாதத்தை ஹன்னா இயோ வன்மையாக மறுத்துள்ளார். ஆனால், ஹன்னா இயோ, YTL-லுடன் தொடர்புடையவர் என்று அந்த மதவாத கட்சிப் பொறுப்பாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

DAP-யின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அவரின் புதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான லிம் குவான் எங் மற்றும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கொக் ஆகியோர், தடை செய்யப்பட்ட முன்னாள் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சின் பெங்கின் உறவினர்கள் என்று பொதுத் தேர்தல் காலத்தில் குற்றஞ்சாட்டியதற்காக பாஸ் கட்சியின் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூரா நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டை DAP-யின் அந்த மூன்று தலைவர்களுக்கும் – அண்மையில் செலுத்தினார்.

இந்நிலையில் பேரா மாநில பாஸ் தலைவர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

YTL- தோற்றுநர் காலஞ்சென்ற Yeoh Tiong Lay-யின் மகனும் அந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவருமான Francis Yeoh Sock Ping- கின் நெருக்கமான உறவினர் ஹன்னா இயோ என்று அந்த பாஸ் தலைவர் கூறியுள்ளார்.

ஆனால், தங்கள் பெயர்களில் அடைமொழியாக விளங்கி வரும் Yeoh என்ற சொல் கொண்டுவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தொடர்புடையவர்கள் அல்ல என்பதை ஹன்னா இயோ விளக்கினார்.

Related News