Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பழைய கதைகள் போதும், தேர்தலைக் கவனியுங்கள்: முஹிதீனைச் சாடும் பாஸ்!
அரசியல்

பழைய கதைகள் போதும், தேர்தலைக் கவனியுங்கள்: முஹிதீனைச் சாடும் பாஸ்!

Share:

பாஸ் கட்சியின் பொருளாளர் டத்தோ இஸ்கந்தர் அப்துல் சமாட் மற்றும் பாஸ் தேர்தல் இயக்குநரான டத்தோ ஸ்ரீ முகமது சனுசி நோர் ஆகியோர் பெசத்து கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் பழைய கதைகளைப் பேசுவதை விடுத்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலக் கூட்டு வெற்றிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும், கடந்த தேர்தலில் பெசத்து கட்சி பெற்ற வெற்றிகளுக்குப் பாஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பே முக்கியக் காரணம் என்றும் பாஸ் கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கூட்டணிக் கட்சிகளுடன் சண்டையிடுவதையும், பழைய கதைகளைப் பேசுவதையும் விட்டுவிட்டு, உண்மையான எதிர்க்கட்சியான பக்காத்தான் ஹராப்பான் மீது தங்களது அரசியல் தாக்குதல்களைத் திருப்ப வேண்டும் என்றும் முஹிதீன் யாசினுக்கு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related News