அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் 245 தொகுதிகளில் 570 வேட்பாளரகள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சலே அறிவித்துள்ளார்.
திரெங்கானு, கிளந்தான், கெடா,பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் அகிய ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலின் வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் நடைபெற்றது. 245 தொகுதிகளில் 181 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
51 தொகுதிகளில் மும்மனைப்போட்டி ஏற்பட்டுள்ள வேளையில் 13 தொகுதிகளில் 4 முனைப் போட்டியும், ஒரு தொகுதியில் 5 முனைப்போட்டியும் ஏற்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ அப்துல் கனி சலே தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் ஒன்பது கட்சிகள் மற்றும் 41 சுயேட்சைகள் இத்தேர்தலில் போட்யிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கோத்தா மலாக்கா சட்டமன்றத் தொகுதியில் நியமனம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களில் அதிக வயதுடையவர் பினாங்கு, ஜெரேஜாக் தொகுதியில் போட்டியிடும் 80 வயது வேட்பாளர் ஆவார். ஆகக் சிறு வயது வேட்பாளர் சிலாங்கூர் , புக்கிட் அந்தரா பங்சா தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு வயது 23 ஆகும். தேர்தலுக்கான பிரச்சாரங்கள் மற்றும் பரப்புரைகள் அனைத்தம் சரியாக வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரவு 11.59 மணியுடன் முடிவடைவதாகவும் டான்ஸ்ரீ அப்துல் கனி நினைவுறுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


