ஷா ஆலாம், நவம்பர்.25-
சிலாங்கூர் மந்திரி பெசார் என்ற முறையில் தனது பதவிக் காலம் நிறைவு பெறும் வரையில் அப்பொறுப்பில் இருக்கப் போவதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
அதே வேளையில் எஞ்சிய தவணைக் காலத்தை கழிக்கும் பட்சத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் எந்தவொரு மாற்றமும் செய்யப் போவதில்லை என்று அவர் உறுதி அளித்தார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸா தகுதியானவர் என்றும், தன்னுடைய இடத்தை அவருக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்றும் அமிருடின் ஷாரி அண்மையில் அறிவித்தது பல்வேறு ஆருடங்களுக்கு வித்திட்டுள்ளது.
இந்நிலையில் தவணைக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யும் வரையில் அப்பதவியில் இருக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.








