ஆறு மாநிலங்களின் தேர்தலை எதிர்கொள்வதற்கு பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ள கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூருக்கு நாவடக்கம் அவசியம் என்று பாஸ் கட்சியின் பொதுக்குழுத் தலைவர் ஹாசிம் ஜாசின் எச்சரித்துள்ளார்.
மதம், இனம், ஆட்சியாளர் சம்பந்தப்பட்ட 3 R விவகாரத்தை ஒரு போதும் மீறி விட வேண்டாம் என்று கெடா மந்திரி புசாருக்கு ஹாசிம் ஜாசின் நினைவுறுத்தியுள்ளார்.
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராப்புடின் .இட்ரிஷ் ஷாவை நிந்தித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள சனூசிக்கு எதிராக போலீஸ் புகார்கள் செய்யப்பட்டு வரும் வேளையில் அவர், தற்போது புக்கிட் அமான் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சர்ச்சைக்குரிய உரையை நிகழ்ந்த வேண்டாம் என்று சனூசியை அந்த பொதுக்குழுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


