Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ தஞ்சாங் வேட்பாளர் டத்தோ டாக்டர் ராஜசேகரனுக்கு வாக்காளர்களிடம் நல்வரவேற்பு
அரசியல்

ஸ்ரீ தஞ்சாங் வேட்பாளர் டத்தோ டாக்டர் ராஜசேகரனுக்கு வாக்காளர்களிடம் நல்வரவேற்பு

Share:

ஸ்ரீ தஞ்சாங் பாக்காத்தான் அரப்பான் வேட்பாளர் டத்தோ டாக்டர் ஜி. ராஜசேகரன், தமக்கு வாக்காளர்களிடம் இருந்து மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாகச் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

குறிப்பாக, உள்கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்த்தது மற்றும் உதவி வழங்கியதன் மூலம் வாக்காளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், ஸ்ரீ தஞ்சாங் தொகுதியில் 18 வயதுடைய புதிய வாக்காளர்கள் 250 பேர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த இளைஞர்களுக்காக கால்பந்துப் போட்டி மற்றும் மின் விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தியுள்ளதாகவும், எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் IPT தொடர உதவியதுடன் அவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்களை அரவணைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related News