Oct 28, 2025
Thisaigal NewsYouTube
உள்துறை அமைச்சரை கண்டித்தார் பிரதமர்
அரசியல்

உள்துறை அமைச்சரை கண்டித்தார் பிரதமர்

Share:

கோலாலம்பூர், ஜுலை 2-

மக்களளைவில் இன்று செவ்வாய்க்கிழமை Batik சட்டையை அணிந்து வந்த உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயிலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் ஆஜராகும் போது ஆடை கோட்பாடு தொடர்பான விதிமுறைகளை பின்பற்றுமாறு சைபுடினுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

மக்களவையில் பாத்தேக் சட்டையை அணிந்திருப்பது குறித்து சைபுடினை நோக்கி கேள்வி எழுப்பிய உலு திரெங்கானு பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. டத்தோ ரோசோல் வாஹிட்டின் வாதத்தை தாம் ஏற்றுக்கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக தமது கேள்வியை முன்வைப்பதற்கு முன்பு, உள்துறை அமைச்சர் சைபுடின் அணிந்திருந்த பாத்தேக் ஆடை குறித்து அந்த பாஸ் கட்சி எம்.பி. கேள்வி எழுப்பினார்

நாடாளுமன்றத்தில் எந்த கிழமையில் பாத்தேக் ஆடையை அணிய வேண்டும் என்ற தமது கேள்விக்கு உள்துறை அமைச்சர் சைபுடின் முதலில் பதில் அளிக்க வேண்டும். காரணம், இன்று செவ்வாய்க்கிழமை பாத்தேக் ஆடையை அணியும் தினமா? என்று அந்த எம்.பி. வினவினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி நாடாளுமன்றக்கூட்டத் தொடர் நடைபெறும் காலகட்டத்தில் வாரத்தில் வியாழக்கிழமை மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாத்தேக் ஆடையை அணிய அனுமதிக்கப்படுவர்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்