கோலாலம்பூர், நவ. 21-
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டோவுக்கு நிகராக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை உவமை காட்டி, ஜெலுத்தோங் எம்.பி. ஆர்.எஸ்.ராயர் புகழ்ந்து பேசியதால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெரும் அமளி துமளில் ஈடுபட்டனர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான நிர்வாகத்தையும் அதில் அவர் கொண்டு வந்துள்ள சீர்த்திருத்துங்களையும் பாராட்டும் விதமாக ஆர்.எஸ்.என். ராயர் பேசிய போது, ஒரு கட்டத்தில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலாவுக்கு நிகராக ஒப்பிட்டு அன்வாரை புகழ்ந்த போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
ராயரின் கேள்விக்கு பதில் அளிக்க பிரதமர் முனைந்த போதிலும் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
பதில் அளிப்பதற்கு பிரதமர் அன்வாருக்கு முதலில் இடம் கொடுத்த சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தனது முடிவை மாற்றிக்கொண்டார். ராயரின் கேள்விக்கு பிரதமர் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஜோஹாரி கேட்டுக்கொண்டார்.








