நிபோங் திபால், நவ. 16-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், வீட்டில் இருந்தபடி கற்றல், கற்பித்தல் முறைக்கு வகை வழிவக்கும் PdPR முறையை மேற்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சசர் பாட்லினா சீடேக் அறிவித்துள்ளார்.
இதற்கான வழிகாட்டலை கல்வி அமைச்சு தற்போது தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள வேளையில் வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் மாற்றத் திட்டமாக மாணவர்களுக்கு PdPR கல்வி முறை அமல்படுத்தப்படும்.
எனினும் இந்த கல்வி முறையை அணுகுவதற்கு முன்னதாக வெள்ளப் பேரிடர் மேலாண்மைக் கழகம் வெளியிட்டுள்ள SOP வழிகாட்டல் பின்பற்றப்பட வேண்டும்.. குறிப்பாக, வெள்ளத்திற்கு முன்பு மற்றும் வெள்ளத்திற்கு பின்பு பள்ளி நிர்வாகம் எடுக்க வேண்டிய நடவடிக்கககள் அதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்லினா சீடேக் விளக்கினார்.
பள்ளி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதேவேளையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிகள் இந்த PdPR கல்வி முறை செயல்படுத்தப்படுத்தலாம் என்று பாட்லினா சீடேக் தெளிவுபடுத்தினார்.








