Sep 23, 2026
Thisaigal NewsYouTube
பிஎன் கூட்டணி இனவாதத்தில் மூழ்கட்டும்; பிஎச் தனது செயல்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும்: தெங்கு ஜாஃப்ருல்
அரசியல்

பிஎன் கூட்டணி இனவாதத்தில் மூழ்கட்டும்; பிஎச் தனது செயல்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும்: தெங்கு ஜாஃப்ருல்

Share:

பெரிகாத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணிகள் இனவாதப் பிரச்சினைகளில் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் வேளையில், பக்காத்தான் ஹரப்பான் தனது சொந்தச் செயல்திட்டங்களில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு ஜாஃப்ருல் அஜிஸ் தெரிவித்துள்ளார். பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குனர் சனுசி நோரின் இனவாதக் கருத்துக்கு பாரிசான் நேஷனல் எதிர்வினை, இவ்விரு கூட்டணிகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் பிலா சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் நோர்சுனிதா பேகம் முகமட் இப்ராகிமிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தபோது பேசிய தெங்கு ஜாஃப்ருல் அஜிஸ், அரசியல் ஆதாயத்திற்காக இனவாதப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கக் கூடாது என்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கூற்றை வழிமொழிந்தார்

Related News