கோலாலம்பூர், டிசம்பர்.30-
தனது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில், சதி வேலைகளோ, நம்பிக்கை துரோகங்களோ நடப்பதில்லை என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தற்போது பெரிகாத்தான் கூட்டணியில் நிலவி வரும் அரசியல் குழப்பம் குறித்தும், முக்கியத் தலைவர்கள் பதவி விலகுவது குறித்தும், பாக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார் இப்ராஹிடம், கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தைச் சேர்ந்த கட்சிகளிடையே பரஸ்பர ஒற்றுமையும், ஒத்துழைப்பும் நிலவி வருவதாகத் தெரிவித்த அன்வார், அவர்களுக்குத் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
தமது கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நிலவி வரும் இந்த புரிதல் காரணமாக, ஒற்றுமை அரசாங்கமானது மென்மேலும் வலுப்பெற்று வருவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.








