Oct 25, 2025
Thisaigal NewsYouTube
கூட்டரசுப் புரதேசத்தில் 5 தொகுதிகளுக்குக் குறி வைக்கும் தேசிய முன்னணி
அரசியல்

கூட்டரசுப் புரதேசத்தில் 5 தொகுதிகளுக்குக் குறி வைக்கும் தேசிய முன்னணி

Share:

நவ. 24-

தேசிய முன்னணி, அடுத்தப் பொதுத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்து கூட்டரசுப் பிரதேசத்தில் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

அக்கூட்டணியின் தலைவர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கூறுகையில், கூட்டரசுப் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் என்று கூறினார்.

Datuk Johari Ghaniயின் Titiwangsa தொகுதி, புத்ராஜயாழ் இலாபுவான் உள்ளிட்ட மூன்று இடங்களை மட்டுமல்லாமல், இறைவன் நல்லசியுடன் நல்ல பேச்சுவார்த்தை நடத்தி ஐந்து இடங்களைப் பெற முடியும் தாம் நம்புவதாக ஸாஹிட் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், அம்னோ, மசீச, மஇகா, பிஆரெஸ், Friends of BN ஆகிய ஒற்றுமை அரசில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

கூட்டரசுப் பிரதேசத்தில் 13 தொகுதிகள் உள்ளன, அவற்றில் 10 தொகுதிகளை பாகத்தான் ஹரப்பானும், இரண்டை பெரிக்காத்தான் நேசனலும், ஒன்றை தேசிய முன்னணியும் கடந்த 15வது பொதுத் தேர்தலில் கைப்பற்றியது.

16வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அரசியல் களத்தில் தேசிய முன்னணி மீண்டும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். நம்முடைய கலாச்சாரம் எதிர்க்கட்சியின் கலாச்சாரம் அல்ல, நாம் விளிம்பில் இருக்க வேண்டிய அவசியமில்லை, நாம் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி பல இடங்களை வெல்ல வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

Related News