Nov 15, 2025
Thisaigal NewsYouTube
சபாவிற்கான 40 விழுக்காட்டு வருவாய் மீதான வாக்குறுதி:  மத்திய அரசாங்கம் நிறைவேற்றும்
அரசியல்

சபாவிற்கான 40 விழுக்காட்டு வருவாய் மீதான வாக்குறுதி: மத்திய அரசாங்கம் நிறைவேற்றும்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.15-

அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்படுவதைப் போல சபா மாநிலத்திற்கான 40 விழுக்காடு வருவாயை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதிப் பூண்டு இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசாங்கம் கொண்டுள்ள கடப்பாட்டிலிருந்து விலகாது என்று சபா மாநிலத்திற்கு இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் 40 விழுக்காட்டு வருமானம் தொடர்பில் வரும் திங்கட்கிழமை மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் ஆகிய இரு தரப்பிலும் உயர் மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழு இவ்விவகாரம் குறித்து விவாதிக்கும் என்று இன்று கோத்தா கினபாலுவில் மக்களுடனான நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News