அலோர்ஸ்டார், நவ.9-
கெடா மாநில சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் Temasya Oghang Kedah Tok 2024, பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெடா மாநில பூர்வீக மக்களின் பெருமைகளையும், அவர்களின் கலச்சார மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றும் வகையில் Temasya Oghang Kedah Tok 2024 ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தும் என்று மாநில சுற்றுலா, கலாச்சார மற்றும் தொழில்முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சல்லே சைடின் நம்பிக்கை தெரிவித்தார்.
தோக் என்பது முந்தைய தலைமுறையினரிடமிருந்து வழங்கப்பட்ட அனைத்து கலாச்சார பாரம்பரியத்திற்கான அன்பு, பாராட்டு மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் வெளிப்பாடாகும். நாம் அதனை மதிக்க வேண்டும். போற்ற வேண்டும்
2025 ஆம் ஆண்டு, கெடா மாநிலத்திற்கு சுற்றுலா ஆண்டாகும். இது போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் நடத்தப்படுவது மூலம் கெடா மாநிலம் அதிகமான சுற்றுப்பயணிகளை கவர முடியும் என்று டத்தோ சல்லோ சைடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.








