Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தொழிற்சங்க உறுப்பினர்கள் 20 லட்சம் பேராக அதிகரிக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொழிற்சங்க உறுப்பினர்கள் 20 லட்சம் பேராக அதிகரிக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், நவ. 14-


நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களில் இணையக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேராக அதிகரிக்கப்பதற்கு மனித வள அமைச்சு இலக்கு கொண்டுள்ளது என்று அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி மலேசியாவில் உள்ள 759 தொழிற்சங்கங்களில் பத்து லட்சத்து 30 ஆயிரத்து 151 பேர் உறுப்பினர்களாக இருப்பதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைமுறைக்கு வந்துள்ள 1959 ஆம் ஆண்டு தொழிற்சங்கம் மீதான 2024 ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்திற்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மலேசியாவில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திருத்தம், தொழிலாளர்களை பிரநிதிநிதிப்பதற்கு தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதற்கு உள்ள தடைகளை அகற்றியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →