டிச. 11-
தொடக்கப்பள்ளிகளில் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்து விட்ட மாணவர்களுக்கு தொழில்பயிற்சிக்கான TVET- கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று துணைபிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் ஆறாம் ஆண்டு கல்வியை முடித்த மாணவர்களுக்கு TVET கல்வித்திட்டடம் போதிக்கப்பட்ட போதிலும் மலேசியாவிலும் அது போன்ற நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக விரிவான ஆய்வு அவசியமாகும் எனறு புறநகர் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஜாஹிட் குறிப்பிட்டார்.
ஐக்கிய அரபு சிற்றரசில், ஆறாம் ஆண்டு கல்வியை முடித்த மாணவர்களுக்கு உடனடியாக TVET கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகள் பலவற்றிலும் அதே அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன..
ஆனால், மலேசியாவைப்பொறுத்தவரை, மாணவர்கள் தங்களின் மூன்றாம் படிவ கல்வியை முடித்தப்பின்னரே TVET கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஆறாம் ஆண்டு கல்வியை முடித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய கல்வி முறை, மலேசியாவில் பொருந்தி வராது என்று துணைப்பிரதமர் விளக்கினார்.








