Oct 28, 2025
Thisaigal NewsYouTube
பிரதமரின் ரஷியப் பயணம் கவனமாக ஆராயப்பட வேண்டும்
அரசியல்

பிரதமரின் ரஷியப் பயணம் கவனமாக ஆராயப்பட வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27-

மலேசியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையில் நல்லுறவு இருந்து வருகிறது என்ற போதிலும் அந்த நாட்டிற்கு வருகை புரியுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ரஷியா விடுத்துள்ள அழைப்பை, மிக கவனமாக திட்டமிட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய புவிசார் அரசியல் நிலை, நிச்சயமற்ற சூழலைக்கொண்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவின் இந்த அழைப்பை ஏற்பதற்கு முன்னதாக அனைத்து நாடுகளுடனான நல்லுறவையும் மலேசியா கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.

அண்மைய காலமாக பிரதமரின் ரஷிய வருகை குறித்து நிறைய அழைப்புகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. ஆனால், அதனை மலேசியாவினால் ஏற்றுக்கொள்ள இயலாது என்று நாடாளுமன்ற மக்களவையில் இன்று மச்சாங் எம்.பி. வான் அகமது ஃபய்சல் வான் அகமது எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் முகமது ஹசான் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்