Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்
அரசியல்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

Share:

பெர்சத்து உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடைநீக்கம் இரு தேர்தல் தவணைகளுக்கு அமலில் இருக்கும் என்றும் அது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி அரசியலமைப்பின் குறிப்பிட்ட விதிமுறையையும் கட்சி உறுப்பினர்களின் நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகளையும் அவர் மீறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், கியாண்டி இந்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த இடைநீக்கம், கட்சியின் ஒழுங்குமுறை வாரியம் இப்போது தலைவரையும் அவரைச் சுற்றியுள்ள ஒரு சிறிய வட்டத்தையும் பாதுகாக்க ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்தை வலுப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

கட்சியில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்ட டத்தோ ஸ்ரீ ஜைனுதீன் ஹம்சாவுடன் இணைந்து துணைப்பிரதமரை பேங்காக்கில் சந்தித்த கூட்டத்தில் தாம் பங்கேற்றது கடுமையான குற்றம் என்றால் தாம் ஏன் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என்றும் என்றும் அவர் வினா எழுப்பியுள்ளார்.

இதனிடையேஅம்முடிவை எதிர்த்து தாம் மேல் முறையோடு செய்யப் போவதில்லை என்றும் கியாண்டி குறிப்பிட்டுள்ளார்.

Related News