Dec 16, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் - நிக் நஸ்மி
அரசியல்

பிகேஆர் கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் - நிக் நஸ்மி

Share:

கோலாலம்பூர், மே.29-

அமைச்சர்கள் பதவி விலகினாலும், பிகேஆர் கட்சிக்குத் தாங்கள் தொடர்ந்து விசுவாசமாக இருப்போம் என நிக் நஸ்மி நிக் அஹ்மாட் உறுதிப்படுத்தியுள்ளார். அதே நேரம், சமூக ஊடகங்களில் பரவிய, 11 பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்குத் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள் என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். பிகேஆர் உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து, நிக் நஸ்மி இயற்கை வளங்கள், நிலைத்தன்மை அமைச்சர் பதவியில் இருந்தும், ரஃபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்தும் விலகினர். மக்களாட்சிக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related News