Oct 28, 2025
Thisaigal NewsYouTube
PEERS முறை கொண்டு வர இருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek குறிப்பிட்டார்
அரசியல்

PEERS முறை கொண்டு வர இருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek குறிப்பிட்டார்

Share:

நவம்பர்- 10

PEERS எனப்படும் மகப்பேறு மற்றும் சமூகக் கல்வி முறையை 2027 பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்க இருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் திருமணமாகாத இளையோர் கர்ப்பச் சம்பவம் அதிகரிப்பதை சமாளிக்க இந்த PEERS முறை கொண்டு வர இருப்பதாக கல்வி அமைச்சர் Fadhlina Sidek குறிப்பிட்டார்.

சிறார் பள்ளி தொடங்கி இடைநிலைப் பள்ளி வரை பாடத்திட்டத்தில் இணைக்கப்படும் அந்த PEERS முறையால் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் அறிவுப்பூர்வமான முடிவுகளை தாங்கள் தங்கள் வாழ்க்கையில் எடுப்பதற்கான சுயகல்வியுடன் கொடுக்கப்பட உள்ளனர்.

இது தொடர்பான பிரச்சனையை கூர்ந்து கவனித்து, பெண்கள், குடும்பம், சமூகநல மேம்பாட்டு அமைச்சோடு இணைந்து செயல்படுவதை எப்போதும் தமது தரப்பு வரவேற்பதாக Fadhlina Sidek கூறினார். இதன் வாயிலாக, பாலியல் துன்புறுத்தல், பெண்களின் சுகாதாரம், சிறுவர்களுக்கான பாதுகாப்பு பற்றிய விவாதங்களை நடத்துவதில், அவ்வப்போது தொடர்ந்து வருவதாகக் கூறினார்.

Related News