Dec 20, 2025
Thisaigal NewsYouTube
விசா விலக்களிப்பு, மலேசிய வர்த்தகத்தை அதிகரிக்கும்
அரசியல்

விசா விலக்களிப்பு, மலேசிய வர்த்தகத்தை அதிகரிக்கும்

Share:

ஜன.5-

இந்தியப் பிரஜைகளுக்கு மலேசியா வழங்கியுள்ள விசா விலக்களிப்பு பொருளாதார ரீதியில் மலேசியா வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்பை தந்துள்ளதாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் R.S. ராஜ கண்ணப்பன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

பினாங்கில் நடைபெற்ற உலகளாவிய தமிழ் வம்சாவயினர் மாநாட்டில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் திசைகளுக்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்தார்.

மலேசியா வழங்கியுள்ள இந்த விசாவிலக்களிப்பு, இந்தியாகவில் உள்ள 143 கோடி மக்கள், மலேசியாவிற்கு வருவதற்கான ஒரு வாய்ப்பை திறந்து விட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்திற்கும் பினாங்கிற்கும் இடையில் நேரடி விமானச் சேவை, பினாங்கு மாநிலத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில அரசாங்கத்தின் இணை ஆதரவில் 11 வது முறையாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டை பினாங்கு முதலமைச்சர் Chow Kon Yeow தொடக்கி வைத்திருப்பது தமிழர்களுக்கு பெருமையாகும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

Related News