லூனாஸ் சட்டமன்றத் தொகுதிற்கு உட்பட்ட இடங்களில் சாலைகள் மிக மோசமாக இருப்பதாக வட்டார மக்கள், அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி.அரிசந்திரனிடம் புகார் அளித்துள்ளனர்.
லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் அரிசந்திரன் கடந்த 11 நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுப்பட்டு வரும் வேளையில் தொகுதி மக்கள் முன்வைக்கின்ற பல்வேறு பிரச்னைகளை செவிமடுத்து வருகிறார்.
தொகுதியில் வெற்றிப் பெறுவதற்கு முன்பே மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண முற்பட்டிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் -மின் முன்னாள் அதிகாரியான அரிசந்திரன் இன்று காலையில் பிரதான சந்தையில் மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
லூனாஸ் மற்றும் பாடாங் செராய் ஆகிய இடங்களுக்குச் செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை அரிசந்திரனிடம் சுட்டிக் காட்டியதுடன், மழைக்காலங்களில் இதனால் அதிகமாக விபத்துகள் நிகழ்வதையும் அவர்கள் விளக்கினர்.
இதேபோன்று பாடாங் செராய் - ஹென்ரேட்டா சாலையிலிருந்து பட்டவெத் செல்லும் சாலை வரை சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வழியுறுத்தினர்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


