Oct 23, 2025
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து மூவாயிரம் பேர் திரண்டனர்
அரசியல்

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து மூவாயிரம் பேர் திரண்டனர்

Share:

புத்ராஜெயா, ஜன.6-

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து, புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றத்திற்கு வெளியே இன்று காலையில் நடந்த பேரணியில் இன்று சுமார் மூவாயிரம் பேர் திரண்டனர்.

இந்தப் பேரணிக்கு போலீஸ் துறை அனுமதி அளிக்கவில்லை.

எனினும் தங்களின் முன்னாள் தலைவரான நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து பாஸ் கட்சி ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அம்னோ உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் நினைவுறுத்தியிருந்தார்.

எனினும் இந்தப் பேரணியில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் உட்பட அம்னோ உறுப்பினர்கள் என்று நம்பப்படும் பலர் கலந்து கொண்டுள்ளனர். அரசாங்க சார்பற்ற அமைப்புகளை சேர்ந்தவர்களும் காலை 6.30 மணியளவில் திரளத் தொடங்கியுள்ளனர்..

Justice For Najib மற்றும் Bebas Najib ஆகிய வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம், நஜீப் வாழ்க என்ற முழக்கத்தை பலர் சூளுரைத்தக்கொண்டு இருந்தனர்.

நஜீப் பேரணியில் தாம் கலந்து கொண்டது தனிப்பட்ட முறையிலாகும். இதற்கும் அம்னோவிற்கும் தொடர்பில்லை என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அ கமால் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் ஓர் ஆண்மகன் என்ற முறையில் நெஞ்சுரத்துடன் பாஸ் கட்சி ஏற்பாட்டிலான இந்தப் பேரணியில் தாம் கலந்து கொண்டதாக அவர் தம்பட்டம் அடித்துக்கொண்டார்.

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக திரண்ட ஆதரவாளர்களின் நிறைய பேருந்துகள், சாலைத் தடுப்பு சோதனையின் மூலம் தடுக்கப்பட்டு இருப்பதாக பாஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி நோர் உட்பட இன்னும் நிறைய அரசியல் பிரமுகர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!