Oct 24, 2025
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் துணைப்பிரதமர்
அரசியல்

குற்றச்சாட்டை மறுத்தார் துணைப்பிரதமர்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மஇகா சந்தித்து, பிரச்னைகளை எடுத்துரைக்கும் அளவிற்கு பாரிசான் நேஷனலின் நல்லிணக்கமான சூழ்நிலை இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை அக்கூட்டணியின் தலைவரும்,துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிம் ஹமிடி மறுத்துள்ளார்.

அம்னோவினால் மஇகா மிக மோசகமாக நடத்தப்படுவதாக கூறி, டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா பொறுப்பாளர்கள் நாளை புதன்கிழமை பிரதமர் அன்வாரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

எனினும் பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் மஇகா, பிரதமர் அன்வாருடன் சந்திப்பு நடத்துவது வழக்கத்திற்கு மாறான நிகழ்வோ அல்லது அதிசயமோ அல்ல. அது வழக்கமான சந்திப்புதான் என்ற அகமட் ஜாஹிட் வர்ணித்தார்.

Related News