தேர்தல் அன்று வாக்காளர்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வரவும், அவர்கள் வீடு திரும்பவும் இலவச பேருந்துப் பயணத்தை வழங்கும் யோசனையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் ஏற்க இயலாது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் இத்தகைய இலவச பேருந்துப் பயணங்களை வாக்காளர்களுக்கு ஏற்பாடு செய்வது பல்வேறு ஐயங்களுக்கு இடம் அளிக்கிறது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார். பேருந்து பயணத்தின் போது நமக்கு தெரியாத விஷயங்கள் நடக்கலாம். இதுபோன்று ஊழலுக்கு வித்திடக்கூடிய ஊழல் சமூகமாக மாறக்கூடாது. அது நடத்தால் ஊழல்வாதிகளே தலைவர்களாக வரக்கூடிய நிலை ஏற்படலாம் என்று அஸாம் பாக்கி நினைவுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
