Oct 24, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் மதிப்பீட்டு வரி 25 விழுக்காடு அதிகரிப்பு
அரசியல்

சிலாங்கூரில் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் மதிப்பீட்டு வரி 25 விழுக்காடு அதிகரிப்பு

Share:

ஷா ஆலாம், டிச.9-


வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் 25 விழுக்காடு அதிகரிப்பை உட்படுத்திய மதிப்பீட்டு வரி மறுசீரமைப்பை சிலாங்கூர் அரசு இன்று அறிவித்துள்ளது.

நூறு விழுக்காடு வரி அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் சொத்து உரிமையாளர்கள் புதிய கட்டண நிர்ணயத்தின் மூலம் 75 சதவிகிதம் வரை தள்ளுபடியைப் பெறுவார்கள் என்று ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ எங் சுயி லிம் கூறினார்,

உதாரணமாக, 2024 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான மதிப்பீட்டு வரி வருடத்திற்கு 100 ஆக இருந்திருந்தால் மறுமதிப்பீட்டிற்கு பிறகு அது வருடத்திற்கு 200 ரிங்கிட்டாக உயர்ந்திருக்கும்.
இருப்பினும் , தற்போது நிர்ணயிக்கப்பட்ட 25 சதவிகிதம் வரையிலான வரி அதிகரிப்பு காரணமாக 2025 இல் செலுத்தப்பட வேண்டிய புதிய வரியின் அளவு 125 ரிங்கிட்டாக மட்டும் இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த தள்ளுபடி வரி விகித அதிகரிப்பு ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்பதோடு இதன் மூலம் அனைத்து ஊராட்சி மன்றங்களும் 35 கோடியே 50 லட்சம் ரிங்கிட்டை கூடுதல் வருமானமாகப் பெறும் என்று விஸ்மா டேவான் நெகிரி சிலாங்கூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எங் சுயி லிம் தெரிவித்தார்.

Related News