ஜோகூர்பாரு, டிச. 9-
ஜோகூர் கடற்பரப்பில் வீற்றிருக்கும் பத்து பூத்தே பவளப்பாறை தீவை சிங்கபூரிடம் இழப்பதற்கு, 2018 ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் காரணமாக இருந்த துன் மகாதீர் முகமதுவிற்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அம்னோ முன்னனி தலைவர் ஒருவர் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்கப்பூருக்கு சாதகமாக அமைந்த அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று துன் மகாதீர் தன்னிச்சையாக முடிவு எடுத்தாக கூறப்படுவது தொடர்பில் அவர் உண்மையிலேயே குற்றம் இழைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் முகமட் புவாட் ஸகார்ஷி தெரிவித்தார்.
துன் மகாதீருக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தால்கூட போதுமானாகும். நாட்டின் அரசுரிமையை விற்றது தொடர்பில் வருகின்ற தலைமுறையினருக்கு ஒரு படிப்பிணையை உணர்த்துவதற்கு ஓர் அடையாளத் தொகையாக துன் மகாதீருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.








