புத்ராஜெயா, ஜூலை 23-
மலேசியாவிற்கு அதிகாரத்துவ அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும், மூத்த அமைச்சருமான லீ சியென் லூங், பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று ஒரு சந்திப்பு நடத்தினார்.
சிங்கப்பூரின் முன்னாள் பிரதமருடனான இச்சந்திப்பின் போது கட்சித்தாவல் சட்டம் உட்பட பலதரப்பட்ட விவகாரங்களை விவாதிக்கக்கூடிய வாய்ப்பு தங்களுக்கு ஏற்பட்டதாக எதிர்கட்சித் தலைவரும், அந்தக் கூட்டணியின் பொதுச் செயலாளருமான டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

மலேசிய மக்களின் வாழ்க்கை செலவின உயர்வு உட்பட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்களையும் லீ சியென் லூங் மிக ஆர்வமாக கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் ராட்ஸி ஜிடின், சைஃபுதீன்அப்துல்லா, டாக்டர் அஹ்மத் யூனுஸ் ஹைரி மற்றும் கைரில் நிஜாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.








