Oct 26, 2025
Thisaigal NewsYouTube
ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது
அரசியல்

ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது

Share:

நவ. 17-

நாடடில் மாணவர்களிடையே மருந்துப் பொருள் பயன்பாட்டை கண்டறிவதற்கான புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறுநீர் பரிசோதனையின் மூலம் பாரம்பரிய மருந்துப் பொருட்கள் மட்டுமல்லாமல், மின்சிகரெட்டுகளில் உள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களையும் கண்டறிய முடியும் என்று உள்துறை அமைச்சர், Datuk Seri Saifuddin Nasution Ismail கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவேற்றப்பட்ட மருந்துப் பொருள் தடுப்பு சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் மீட்பு அதிகாரிகள் இதற்கானத் தொடக்கக் கட்டப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார். குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்கள் பாரம்பரிய வகைகளை விட செயற்கை வகைகளாக இருப்பதால், இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றார்.

உள்துறை அமைச்சு, தடைசெய்யப்பட்டப் பொருட்களைப் பரிசோதிக்க ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் மூலம் அனைத்து வகையான தடைசெய்யப்பட்டப் பொருட்களையும் போதைப் பொருட்களையும் துல்லியமாக கண்டறிய முடியும். மேலும், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் மத்தியில் இப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒரு புதிய பிரச்சாரத்தை அமைச்சு தொடங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஒரு சிறப்பு ஆய்வகத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது | Thisaigal News