Oct 29, 2025
Thisaigal NewsYouTube
8 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு மாமன்னர் ஒப்புதல்
அரசியல்

8 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு மாமன்னர் ஒப்புதல்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 29-

நாட்டின் 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் இரண்டாவது கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 8 சட்டத்திருத்த மசோதாக்ககளுக்கு மாமன்னர் Sultan Ibrahim ஒப்புதல் அளித்துள்ளதாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுன் 24 ஆம் தேதி முதல் ஜுலை 18 ஆம் தேதி வரை நடைபெற்ற இக்கூட்டத் தொடரின் போது, எட்டு சட்டத்திருத்த மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்திற்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவற்றுள் 2024 ஆம் ஆண்டுக்கான சிறார் சட்டத்திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டுக்கான வாக்குமூலச் சட்டத்திருத்த மசோதா, உறுதிமொழி சட்டத்திருத்த மசோதா உட்பட எட்டு சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மாமன்னரின் அங்கீகாரத்ததிற்கு அனுப்பப்பட்டதாக டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல்தெரிவித்தார்.

தவிர இராணுவப்படை சட்டத்திருத்த மசோதா, கட்டமானத் தொழில்துறை சட்டத்திருத்த மசோதா ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்ட அந்த சட்டத்திருத்த மசோதாக்களில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News