Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், மலாய்க்காரர்களின் ஆதரவை அம்னோவால் கவர முடியும்.
அரசியல்

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், மலாய்க்காரர்களின் ஆதரவை அம்னோவால் கவர முடியும்.

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 30-

பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியுடன் இணைந்து நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சியில், மலாய்க்காரர்களின் ஆதரவை வலுப்படுத்த அம்னோவால் மட்டுமே முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் காரணமாக, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் மீண்டும் கட்சியினுள் சேர்த்துக்கொள்ள, அக்கட்சி முன்வந்திருப்பதாக, மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் லாவ் சே வெய் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் ஹாராப்பான்-ன்னால், மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற முடியவில்லை என கூறிய அவர், கட்சியிலிருந்து நீக்கியவர்களை அம்னோ இதற்குமுன்பு மீண்டும் சேர்த்துக்கொண்டதை சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, மலேசிய அறிவியல் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிவமுருகன் பாண்டியன் கூறுகையில், அரசியல் வியூகத்தின் அடிப்படையில் நீக்கப்பட்ட தலைவர்களை மீண்டும் கட்சியினுள் இணைத்துக்கொள்ள, அம்னோ அழைத்தால் அவர்கள் அக்கோரிக்கையை நிராகரிப்பார்கள் என கூறினார்.

ஆனால், கட்சியில் தங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டால், அவர்கள் அம்னோவில் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், மலாய்க்காரர்களின் ஆதரவை ... | Thisaigal News