Oct 24, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
அரசியல்

மக்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்

Share:

கெடா, லூனாஸ் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி மக்கள் பிரதிநிதியாக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் தாம் அதீத முன்னுரிமை வழங்கவிருப்பதாக லூனாஸ் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக சாவி சின்னத்தில் போட்டியிடும் சி. அரிச்சந்திரன் உறுதி கூறியுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், லூனாஸ் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவுப்பெறும் தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள வேளையில் இன்று கூலிம், லென்மாக் பேரங்காடி மையத்திற்கு சென்று அங்குள்ள வியாபாரிகளையும் பொது மக்களையும் சந்தித்து ஆதரவு கோரினார்.

லூனாஸ் வட்டாரத்தில் தாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை வியாபாரிகளிடமும், பொது மக்களிடமும் கேட்டறிந்த அரிச்சந்திரன், மக்கள் முதன்மைப்பிரச்னையாக தண்ணீர் பிரச்னையை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் லூனாஸ் தொகுதியில் வாக்காளர்கள் தம்மை வெற்றிப்பெறச் செய்வார்களேயானால் தண்ணீர் பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என்று அரிச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.

அரசாங்க அமலாக்க ஏஜென்சியில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற போதிலும் லூனாஸ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் மக்கள் தங்களின் பிளவுப்படாத ஆதரவை தமக்கு வழங்க வேண்டும் என்று அரிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

Related News