Jan 25, 2026
Thisaigal NewsYouTube
புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டாரா முகைதீன் யாசின்?
அரசியல்

புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டாரா முகைதீன் யாசின்?

Share:

கோலாலம்பூர், ஜனவரி.25-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் ஜனவரி 29-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்திற்கு, அதன் முன்னாள் தலைவரும் பெர்சத்து தலைவருமான முகைதீன் யாசினுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி பெர்லிஸ் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக முகைதீன் யாசின் அறிவித்திருந்த நிலையில், ஜனவரி 1 முதல் அந்தப் பதவி அதிகாரப்பூர்வமாகக் காலியாக உள்ளது.

இருப்பினும், பெர்சத்து கட்சியின் தலைவராகவும் கூட்டணியின் துணைத் தலைவராகவும் முகைதீன் யாசின் தற்போதும் நீடிப்பதால், மரபுப்படி இந்தக் கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என அக்கட்சி வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கெராக்கான் தலைவர் டாமினிக் லாவ், MIPP தலைவர் பி. புனிதன் உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், முகைதீனுக்கு பதிலாகப் புதிய தலைவரை நியமிப்பதில் பாஸ் - பெர்சத்து இடையே நிலவும் இழுபறி மேலும் அதிகரித்துள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "உங்களால் ஒரு முதல்வர் வேட்பாளரை அடையாளம் காட்ட முடியுமா?" – நம்பிக்கைக் கூட்டணிக்கு அம்னோ சவால்!

பெர்லிஸ் அரசியல் குழப்பம்: "நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே பரிந்துரைத்தோம், பாஸ் கட்சியில் தலையிடவில்லை" - பெர்சாத்து விளக்கம்!

பெர்லிஸ் அரசியல் குழப்பம்: "நிர்வாகச் சிக்கலைத் தீர்க்கவே பரிந்துரைத்தோம், பாஸ் கட்சியில் தலையிடவில்லை" - பெர்சாத்து விளக்கம்!

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்

சபா இடைத்தேர்தலில் 36 வாக்குச் சாவடிகளில் வாக்களிப்புகள் தொடங்கின: 48,722 பதிவுச் செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்

பெரிகாத்தான் இனி பாஸ் கட்சியின் பிடியில்: அரசியல் களத்தில் அதிரடி மாற்றம்

பெரிகாத்தான் இனி பாஸ் கட்சியின் பிடியில்: அரசியல் களத்தில் அதிரடி மாற்றம்

பெரிக்காத்தானில் இணைய மஇகா விண்ணப்பம் ஏற்பு: இனி முடிவெடுப்பது மஇகா கையில்- டான் ஶ்ரீ முகைதீன் அறிவிப்பு

பெரிக்காத்தானில் இணைய மஇகா விண்ணப்பம் ஏற்பு: இனி முடிவெடுப்பது மஇகா கையில்- டான் ஶ்ரீ முகைதீன் அறிவிப்பு