இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகளான சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் நிலைத்து இருப்பதற்காக அதற்கு முன்னுரிமை வழங்கி இடமளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார்.
நீண்ட காலமாக மரபுரிமையாக இருந்து வரும் தாய்மொழிப்பள்ளிகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட செய்வதே சிறப்பு அம்சமாகும் என்று பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
நாட்டில் பல்வேறு இனங்கள் ஒன்றிணைந்து கல்வி மேற்கொள்வதற்காக தேசிய பள்ளிகள் இருந்த போதிலும், சீன மற்றும் தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் பயிலும் அமைப்பை நாம் மரபுரிமையாக பெற்றுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
காரணம், சில பகுதிகளில் மலாய் இனத்தவர்கள் 100 சதவீதம் இருக்கின்றனர். இன்னும் சில பகுதிகளில் சீன மற்றும் இந்தியர்கள் பெரும்பான்மை குடியேறியுள்ளனர்.
அதுவே ஒரு முதன்மை சான்றாகவும் தாய்மொழிப்பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து செயல்படுவதற்கு தகுதி பெற்றிருக்க முக்கிய காரணமாகும் என்று பிரதமர் மேலும் தகவலளித்தார்.








