Aug 13, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்
அரசியல்

சிரம்பான் ஜெயா: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகுந்தனின் வெற்றியை இந்திய வாக்காளர்கள் உறுதி செய்ய வேண்டும் என RSN ராயர் வேண்டுகோள்

Share:

சிரம்பான், ஜூலை.28-

வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், நெகிரி செம்பிலான் மாநில இந்திய வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து மகத்தான வெற்றி பெறச் செய்வார்கள் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். முகுந்தனை ஆதரித்து இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இதனை வலியுறுத்தினார். இத்தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான முகுந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமார் ஆகியோருக்கு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றி சிறந்த அனுபவம் பெற்றவர் என்று ராயர் குறிப்பிட்டார்.

மக்களுக்குச் சிறப்பான சேவை ஆற்றக்கூடிய தகுதியைக் கொண்டுள்ள முகுந்தனின் வெற்றியைத் தொகுதி இந்திய வாக்காளர்கள் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் லிங்கேஸ்வரனுடன் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஆர்.எஸ்.என். ராயர் இக்கோரிக்கையை விடுத்தார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்