நெகிரி செம்பிலான் சட்டமன்ற உறுப்பினர்களில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்தவர் என்று புகழப்படும் டிஏபி யை சேர்ந்த ஜே. அருள்குமார், தமது நீலாய் தொகுதியை தற்காத்துக்கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார். இன்று காலையில் நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் நீலாய் தொகுதியில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இரண்டு தவணைக்காலம், நீலாய் தொகுதியை தற்காத்து வரும் பக்காத்தான் ஹராப்பனை சேர்ந்த அருள்குமாரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கன் ச்சீ பிஓவ் , இரண்டு சுயேட்சை வேட்பாளர்களான ஓமார் பின் முகமட் ஈசா மற்றும் யேஸ்ஸூ ஆகியோர் போட்டியிடுகின்னர்.
நெகிரி செம்பிலான் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரான அருள்குமார், கடந்த 2013ஆம் ஆண்டு நீலாய் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு 5 ஆண்டுகாலம் எதிர்க்கட்சி உறுப்பினராக சேவையாற்றியுள்ள வேளையில் 2018 பொதுத் தேர்தலில் மீண்டும் அதேதொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றிக்கு பின்னர் பக்காத்தான் ஹராப்பான் மாநில ஆட்சியின் கீழ் ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியவர் ஆவார்.
இதனிடைய டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பானின் ஓர் தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா தமது சிரம்பான் ஜெயா தொகுதியை தற்காத்துக்கொள்ள மீண்டும் போட்டியிருகிறார். இன்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்த பி. குணா, அத்தொகுதியில் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். குணாவை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கரி லீ என்பவர் போட்டியிடுகிறார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


