Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நைகல் கார்டனர் தோட்டத்தில் தீவிர பிரச்சாரம்
அரசியல்

நைகல் கார்டனர் தோட்டத்தில் தீவிர பிரச்சாரம்

Share:

ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் கண்டுள்ள சையிட் சாடிக் அப்துல் ரஹ்மானின் மூடா கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வேளையில் கோலகுபுபாரு தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு கல்விமானாகிய டாக்டர் ரா. சிவபிரகாஷ், இன்று நைகல் கார்டனர் தோட்டத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் சிப்பாங்கிற்கு அடுத்து மிகப்பெரிய நாடாளுமன்றத் தொகுதியான உலு சிலாங்கூருக்கு உட்ட கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுயின் வாக்காளர்கள், பெஸ்தாரி ஜெயா எல்லையொட்டியுள்ள நைகல் கார்டன் தோட்டம் வரையில் உள்ளனர்.

இன்று வியாழக்கிழமை அப்பகுதியில் தமது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய டாக்டர் சிவபிரகாஷ், வாக்காளர்கள் மூடா கட்சியை ஆதரிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் சிலாங்கூர் சட்டமன்றத்தில் மூடா கட்சியின் குரல் ஒலிப்பது மூலமே கல்வி,பொருளாதாரம், சமூகவியல் போன்ற துறைகளில் ஒரு சமத்துவமான முறையை காண முடியும், அதற்கான முன்னெடுப்புகளை மூடா மேற்கொள்ளும் என்று டாக்டர் சிவபிரகாஷ் விளக்கினார்.

முன்னதாக நைகல் கார்டனர் தோட்டத்திற்கு வருகை புரிந்த டாக்டர் சிவபிரகாஷிற்கு மக்கள் உற்சாக வரவேற்பை நல்கினர்.

Related News