நவ. 17-
நாட்டின் கடல் எல்லைகளை மீறுவதுடன், சபா மீதான உரிமைகோரல் பிரச்சினையைத் தொடும் புதிய சட்டத்தை பிலிப்பைன்ஸ் நாடு நிறைவேற்றியிருந்தாலும், மலேசியா தொடர்ந்து நம் நாட்டு நிலப்பரப்பு, அதன் எல்லைப் பகுதிகள், நாட்டின் இறையாண்மை ஆகியவற்றைத் தற்காக்கும்
அனைத்துலகச் சட்டத்தின்படி, நாட்டின் கடற்பரப்பின் எல்லைப் பகுதியில் show of presence முறையில் Maritime Domain Awareness – MDA எனப்படும் கடல்சார் கள விழிப்புணர்வைச் செயல்படுத்த இருப்பதாக மலேசியத் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.
அரச மலேசிய வான் படையும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான Maritim Malaysiaவும் ஒருங்கிணைந்த ரோந்துப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
அதே சமயம், மலேசியாவும் சமாதான முறையில் முக்கிய அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது. மலேசியாவின் பாதுகாப்பிற்காக கடல் எல்ல்லைப் பகுதியைக் குறிக்க பயன்படுத்தப்படும் சட்டங்களை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப பயன்படுத்துகிறது. மேலும், பழைய வரைபடத்தில் மாற்றங்கள் இருப்பதாக நாம் உணர்ந்தால், புதிய வரைபடத்தை வெளியிட வேண்டிய அவசியம் இருக்கும் என்று தாம் கருதுவதாக காலிட் நோர்டின் கூறினார்.
நமது வரைபடத்தை நாம் மாற்றவில்லை. மாற்றத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவ்வப்போது அவர்கள் செய்யும் மாற்றத்தில் நமது வரைபடத்தை உட்படுத்தி இருக்கிறார்கள். மலேசியாவில் புதிய பகுதிகள் சேர்க்கப்படும் போது மட்டுமே நாம் வரைபடத்தை மாற்றுகிறோம் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். .
ஆகக் கடைசியாக, 1979ஆம் ஆண்டு மலேசியாவின் கடல் எல்லைகளை உபடுத்திய வரை படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.








