Jun 26, 2026
Thisaigal NewsYouTube
தென்னாப்பிரிக்காவுடன் தொழில்நுட்பத்துறையில் மலேசியா ஒத்துழைப்பு
அரசியல்

தென்னாப்பிரிக்காவுடன் தொழில்நுட்பத்துறையில் மலேசியா ஒத்துழைப்பு

Share:

ஜொஹன்னஸ்பெர்க், நவம்பர்.21-

மென்பொருள் தயாரிப்புத்துறை உட்பட தென் ஆப்பிரிக்காவுடன் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது குறித்து மலேசியா உறுதிப் பூண்டுள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், பொருளாதாரம், தொழில்துறை, விவசாயம், பசுமைத் திட்டம், தொழில்நுட்பம், ஆய்வியல் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அந்த ஆப்பிரிக்க நாட்டுடன் கூட்டு ஒத்துழைப்புக் கொள்வது குறித்து உடன்பாட்டையும் செய்து கொண்டார்.

ஜொஹன்னஸ்பெர்க்கில் தென்னாப்பிரிக்க அதிபர் Matamela Cyril Ramaphosa-வுடன் நேரடி சந்திப்பு நடத்தியப் பின்னர் இரு நாடுகளும் மேற்கண்ட துறைகளில் கூட்டு ஒத்துழைப்புக் கொள்வதற்கு இணக்கம் கண்டன.

Related News