சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெர்மாத்தாங் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப்படத்தை தாங்கிய பதாகைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அத்தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமது யாஹ்யா மத் சஹ்ரி புகார் தெரிவித்துள்ளார். அந்தப் பதாகையில் பிரதமர் அன்வாரின் படம் வெட்டப்பட்டு, பெரிய துவாரமிடப்பட்டுள்ளதாக முகமது யாஹ்யா குறிப்பிட்டார். நான்கு இடங்களில் கட்டப்பட்டுள்ள பதாகைகளில் இத்தகைய சிரைச்சேதம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார் சில பொறுப்பற்ற நபர்களால் மேற்கொள்ளப்பட்ட இச்சம்பவம் குறித்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகமது யாஹ்யா கேட்டுக்கொண்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
